
கோபி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்டு ராதிகாவுடன் சண்டை போடும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
நாளுக்கு நாள் கோபியின் ஆட்டம் அதிகரித்து கொண்டே செல்வதால் தாத்தா பாக்கியாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறும்படியும், பாக்கியா ராதிகாவிடம் சண்டை போடும்படியுமான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியாவின் கண்ணுக்கு முன்னால் கோபி தவறு செய்தும் கூட பாக்கியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு கோபியின் மீது பாக்கியா நம்பிக்கை வைத்திருக்கிறார். தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளும் மனைவியை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்ய கோபி துடித்து கொண்டிருக்கிறார். தனக்கு உன்னை தவிர பாசத்தை கொடுக்க யாருமில்லை என ராதிகாவையும் ஏமாற்றி தான் கோபி திருமணம் செய்ய போகிறார்.
ExamsDaily Mobile App Download
தற்போது பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கியதால் பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கின்றனர். உணவுக்கு ஆர்டர் கொடுத்தவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவையும் போலீசார் கைது செய்கின்றனர். பாக்கியாவை காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி யாரின் காலையும் அட்டென்ட் செய்யவே இல்லை. ராதிகாவை மட்டும் காவல் நிலையத்தில் இருந்து காப்பாற்றி கூட்டி வருகிறார்.
VJவாக இருந்து சீரியலில் களமிறங்கும் ‘விஜய் டிவி’ பிரியங்கா – இணையத்தில் லீக்கான தகவல்!
பாக்கியாவை நம்பியதிற்கு அவர் என்னை காவல் நிலையம் வரை அழைத்து சென்றுவிட்டார். இதனால் இனி பாக்கியாவின் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என கூறி ராதிகா சண்டை போடுகிறார். எதுவுமே நடக்காதது போல கோபி வீட்டிற்கு வருகிறார். இதற்கு மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது என தாத்தா பாக்கியாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறும்படியும், பாக்கியா ராதிகாவிடம் சண்டை போடும்படியும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.