
தற்கொலை செய்ய முடிவெடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் குடும்பமே பாக்கியா மீது கோவமாக இருக்கின்றனர். மேலும், கோபி செய்த தவறை மறந்து மொத்த குடும்பமும் பாக்கியாவையே குறை சொல்லுவதால் பாக்கியா தற்கொலை செய்துகொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் இதற்கு பிறகும் கோபி வீட்டில் இருக்க கூடாது என கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். ஆனால், கோபியின் மீது தான் தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கூட பாக்கியாவை தான் குறைசொல்லி கொண்டிருக்கின்றனர். அதாவது, இதற்கு பிறகு கோபி ராதிகாவை சென்று தான் சந்திப்பான். அதற்கு நீயே இடம் கொடுத்துவிட்டாய் என பாக்கியாவை ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா ஆகியோர் திட்டி கொண்டிருக்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் – புதுவை அரசு அறிவிப்பு!
ஆரம்பத்தில் கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது பாக்கியாவிற்கு தெரிய வந்ததும் பாக்கியா வீட்டை விட்டு சென்றுவிட்டார். அப்போது பாக்கியா இல்லாமல் அந்த குடும்பமே மிகவும் கஷ்டப்பட்டது. அதற்கு பிறகு தான் பாக்கியா நாம் குடும்பத்திற்காகவாது உழைக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காக தான் மறுபடியும் வீட்டிற்கு வந்தார். ஆனால், தற்போது கோபி செய்த குற்றத்தை மறந்து விட்டு பாக்கியாவை கண்டபடி திட்டி கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo
குழந்தைகளை யோசித்து பார்த்தாயா எனவும் பாக்கியாவை ஈஸ்வரி வெளுத்துவாங்கி கொண்டிருக்கிறார். இதற்கு இடையே இனியாவும் அமைதியாக இல்லாமல் நான் அப்பாவை மிகவும் மிஸ் செய்கிறேன். உங்களால் தான் குடும்பமே பிரிந்து விட்டது என பாக்கியா மீது பழி சுமத்தி கொண்டிருக்கின்றனர். நம் பிள்ளைகளே நம்மை புரிந்துகொள்ளவில்லை, கணவரும் வேறொரு பெண்ணை தேடி சென்றுவிட்டார் இதற்கு பிறகு யாருக்காக உயிர் வாழ வேண்டும் என நினைத்து பாக்கியா தற்கொலை செய்துகொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்