விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாவம் கணேசன்" சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த வகையில் குடும்ப கதையுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாவம் கணேசன்” இந்த சீரியலில் நடிகர் நவீன் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் முக்கிய நடிகை ஒருவர் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை விலகல்:

பாவம் கணேசன் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்கென்றே வாழும், உழைக்கும் இளைஞன் பற்றிய கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நகைசுவை நடிகர் நவீன் நடித்து வருகிறார். குடும்ப கதையை மையமாக கொண்ட இந்த சீரியலில் கதாநாயகியாக குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார்.

கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீர் திருப்பம்!

வாட்டர் கேன் சப்ளை, பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வரை எல்லா வேலைகளையும் செய்து கணேசன் தன்னுடைய தந்தை இல்லாத குடும்பத்தை கவனித்து வருகிறார். ஒரு தம்பி, 2 தங்கை மற்றும் அக்கா அடங்கிய பெரிய குடும்பம் கணேசனிற்கு இருக்கிறது. மூத்த அக்கா .அம்மா வீட்டில் பேசக் கூட கணவரிடம் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கும். வீட்டுக்கு கஷ்டம் தரக்கூடாது என நினைத்து சோகங்களை மறைத்து வாழும் ஒரு சராசரி பெண் கதாபாத்திரம் போல காட்டப்படும்

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கணேசனின் மூத்த அக்காவாக சித்ரா கதாபாத்திரத்தில் நடித்த விஷாலினி திடீரென சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சீரியலில் கணேசனின் அக்காவாக, நேத்ரனின் மனைவியாக சித்ரா ரோலில் லதா ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனாலும் சின்னத்திரையில் லதா ராவ் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!