TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

TNPSC இணையதளத்தில் OTR எனப்படும் நிரந்தர கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அண்மையில் 2022ம் ஆண்டு TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுத கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு குறித்து எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு குறித்த அறிவிப்பு இம் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக இளைஞர்களுக்கு அரசு பணிகளில் 100% பணியமர்த்தும் வகையில் நடப்பாண்டு முதல் அனைத்து வித அரசு போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!

TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் பிரிக்கப்படும் மேலும் TNPSC தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பாக TNPSC இணையதளத்தில் நிரந்தர பதிவு (OTR) வைத்துள்ளவர்கள் அதனுடன் உங்களின் ஆதார் எண்ணை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அரசு பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதிவேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த BA 2 – அச்சத்தில் பொதுமக்கள்!

மேலும் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் போட்டித்தேர்வுகளுக்கு ஒருமுறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!