மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு - 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு - 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி DA ஆனது 34% ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

7வது ஊதியக்குழு:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் அளிக்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது அரசு அகவிலைப்படியை உயர்த்தியது போலவே, தற்போது ஹோலி பண்டிகைக்கு முன்னதாக டிஏ அதிகரிப்பு அறிவிக்கப்படலாம். அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி (டிஏ உயர்வு) கிடைக்கும்.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI இன்டெக்ஸ்) படி, டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீட்டு எண் 351.33, சராசரியாக 34.04%. ஆனால், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. இதனால் ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தற்போது, 31% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். ஆனால் ஜனவரி 2022 முதல், 3% கூடுதல் அகவிலைப்படியினை பெறுவார்கள். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Office பணத்தை அள்ளித்தரும் திட்டம் – தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ்!

அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் படி, .18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். ஆண்டுக்கு ரூ.6,480 சம்பளத்தில் அதிகமாக பெறுவார்கள். இதனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பணியாளர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!