IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!

0
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!
IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 வீரர்கள் லிஸ்ட் ரெடி!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் 25 வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து, முதல் போட்டியில் கலந்து கொள்ளும் உத்தேச 11 அணிக்கான வீரர்கள் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ்

இதுவரை நடைபெற்ற 14 சீசன்களுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 25 வீரர்களுடன் 2022 IPL போட்டிகளில் களம் காண இருக்கிறது. பொதுவாக IPL போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கீரன் பொல்லார்ட், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற அதிரடியான ஆட்டக்காரர்கள் இருப்பதால் இந்த அணி சிறந்த அணியாக கருதப்படுகின்றது. இவர்களது ஆட்டத்தினால் எப்போதும் ஆடுகளத்தில் எதிர்பாராத சில ஸ்வாரசியங்கள் நிகழ்வது வழக்கம்.

அதிவேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த BA 2 – அச்சத்தில் பொதுமக்கள்!

அந்த வகையில் இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, கீரன் பொல்லார்ட், சூர்ய குமார் யாதவ் போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட, கூடுதலாக 21 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக ரூ.15 கோடி செலவில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். இவர்களுடன் 2022 IPL ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் (ரூ. 8 கோடி), டிம் டேவிட் (8.25 கோடி), மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் (ரூ. 3 கோடி) ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த தேர்வாக அமைந்துள்ளனர்.

இப்போது IPL 2022 போட்டியின் முதல் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச 11 வீரர்களின் விவரங்கள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரோஹித் சர்மா:

ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தொடக்க ஆட்டத்திலும் அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது. வலது கை பேட்ஸ்மேன் ஆன ரோஹித் சர்மா ரூ.16 கோடி மூலம் மும்பை அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில், ரோஹித் சர்மா 13 ஆட்டங்களில் விளையாடி 381 ரன்கள் குவித்திருந்தார்.

இஷான் கிஷான்:

ஐபிஎல் 2022ன் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்ற தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷன் இருக்கலாம் என்று தெரிகிறது. மும்பை அணியின் விக்கெட் கீப்பராக திகழும் இஷான் கிஷான் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் IPL 2022ல் MIக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேபியன் ஆலன்:

மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக இணைந்திருக்கும் பேபியன் ஆலன், 3வது இடத்தில் பேட்டிங் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த இவர் ரூ.75 லட்சத்தில் மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் அப்போது வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே இவர் பங்கேற்றிருந்தார்.

சூர்யகுமார் யாதவ்:

மிடில் ஆர்டரில் சிறந்த வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2022ன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மும்பை அணி வலது கை பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவை ரூ. 8 கோடியில் தக்கவைத்து கொண்டது. கடந்த ஐபிஎல் 2021 சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 14 ஆட்டங்களில் 317 ரன்கள் எடுத்திருந்தார்.

டேனியல் சாம்ஸ்:

ஐபிஎல் 2022 இன் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில், டேனியல் சாம்ஸ் மற்றொரு பேட்ஸ்மேனாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ரூ. 2.6 கோடியில் மும்பை அணிக்கு இடம்பெயர்ந்துள்ளார். கடந்த இரண்டு சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய இவர் 5 ஆட்டங்களில் 3 ரன்களும் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

கீரன் பொல்லார்டு:

மும்பை அணியின் பக்க பலமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்டு தொடக்க ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் மற்றும் கீழ்-வரிசை பேட்ஸ்மேனாக இருப்பார். இவர் 2010 ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானது துவங்கி இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர், 30.62 சராசரியில் 245 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

ரிலே மெரிடித்:

MI அணியில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் ரூ. 1 கோடியில் மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார்.

ஜெய்தேவ் உனட்கட்:

கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், ரூ. 1.3 கோடியில் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். உனட்கட் கடந்த சீசனில் 6 போட்டிகளில் கலந்து கொண்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜஸ்பிரித் பும்ரா:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ. 12 கோடியில் தக்கவைக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஐபிஎல் 2021 சீசனில், 14 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக கடந்த IPL சீசனில் அதிக விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருந்தார்.

முருகன் அஸ்வின்:

இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின் இடம்பிடிக்கலாம் என்று தெரிகிறது. இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் இவர் 1 விக்கெட்டை எடுத்துள்ளார்.

மயங்க் மார்கண்டே:

ஐபிஎல் 2022 இன் தொடக்க ஆட்டத்தில் MI அணி தேர்வு செய்யக்கூடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக மயங்க் மார்கண்டே இருக்கலாம் என்று தெரிகிறது. ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.65 லட்சத்திற்கு இவரை வாங்கியது. கடந்த ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய மயங்க் மார்கண்டே MI அணியில் இடம்பெற்ற முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

வழக்கமாக IPL போட்டிகளில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே எப்போதும் கடுமையான போட்டிகள் நிலவும். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி செல்லும் கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணிக்கு தலைமை தாங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமை தாங்குவதால் இந்த இரு அணிகள் மோதும் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!