“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் புதிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி மனோகரன் சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை இன்றைய எபிசோட் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் இனி வர போகும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். முதலில் இந்த சீரியல் சொல்லும் அளவிற்கு வரவேற்பை பெறாமல் இருந்தாலும், அதன் பின் படிப்படியாக சீரியலில் கதையில் சுவாரசியம் அதிகரித்து தற்போது டாப் சீரியலாக இருக்கிறது. வாரம் வாரம் ஒரு சஸ்பென்ஸ் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் கண்ணம்மாவின் பிறந்தநாளில் லட்சுமி அப்பா பற்றிய உண்மையை சொல்ல போவதாக கண்ணம்மா சொல்லி இருக்கிறார்.
யார் இந்த ‘பாக்கியலட்சுமி’ சுசித்ரா? அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ! ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் அந்த எபிசோடுகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். லீடிங்கில் இருக்கும் இந்த சீரியலில் இருந்து பல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் விலகி கொண்டே இருக்கின்றனர். முதலில் பாரதியின் தம்பியாக அகில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அகிலன் சீரியலில் இருந்து விலகினார். அவர் சினிமாவில் நடிக்க இருப்பதால் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் 600 எபிசோடுகளுக்கு மேல் நடித்த ரோஷினி விலகினார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா காதலர் தினம் அன்று செய்த காரியம்? உற்சாகத்தில் ரசிகர்கள்!
அவர் விலகலுக்கான சரியான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. அவருக்கு பதிலாக தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி களமிறங்கி இருக்கிறார். இந்நிலையில் கடைசியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி மனோகரன் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் வேறு தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிகை அருள் ஜோதி என்பவர் களமிறங்கி இருக்கிறார். இன்றைய எபிசோடில் அவர் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.