தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வர் வெளியிட்ட தகவல்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - முதல்வர் வெளியிட்ட தகவல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - முதல்வர் வெளியிட்ட தகவல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து கடந்த 2004ம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. மேலும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பணிக்கொடை, குடும்ப பாதுகாப்பு நிதி, கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் ஆகியோருக்கு தற்போது 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

உதவித்தொகை விண்ணப்பத்திற்கு அக்.31 இறுதி நாள் – கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்- ஆசிரியர் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கூறியிருப்பதாவது, தமிழக அரசின் நிதிநிலை சீரான நிலைக்கு திரும்பியுடன் மீண்டும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார். அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!