உதவித்தொகை விண்ணப்பத்திற்கு அக்.31 இறுதி நாள் – கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

1
உதவித்தொகை விண்ணப்பத்திற்கு அக்.31 இறுதி நாள் - கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
உதவித்தொகை விண்ணப்பத்திற்கு அக்.31 இறுதி நாள் - கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
உதவித்தொகை விண்ணப்பத்திற்கு அக்.31 இறுதி நாள் – கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

கல்லூரி மாணவர்களது கல்விக்கு உதவியாக இருக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏழ்மை காரணமாக மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகிறது. இதற்காக பல திட்டங்களும் முன்னதாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 12-ம் வகுப்பை முடித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இது தொடர்பாக, தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, மத்திய அரசு ‘ central sector scheme of scholarship for college and university students’ என்ற பெயரில் திறன் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது.

தமிழக வருவாய்த்துறை சேவைகளுக்கான இணையதள வசதி – இனி இடைத்தரகர்களுக்கு சிக்கல்!

Exams Daily Mobile App Download

இந்த உதவித்தொகையினை பெற மாணவர்கள் முழு நேர கல்லூரியில் பயில வேண்டும். இளநிலை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.30,000 தொகையும், முதுநிலை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000ம் வழங்கப்படும் என்றும், இந்த உதவித்தொகையினை பெற மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!