தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்களை பற்றி பார்ப்போம்.

ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் தருவாயில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு மாற்றியமைத்தது. அதன்படி தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் எதுவும் கிடைக்காததால் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு கடந்த 12 வருடங்களாக எந்தவொரு நடவடிக்கையும் அரசு எடுக்காததால் அரசு ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்ட உணர்வை தூண்டும் அளவுக்கு இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்களெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள்:

1. பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சேமிப்பு தொகையில் இருந்து தேவைப்படும் போதெல்லாம் கடனாக எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கிடையாது.

2. அரசு ஊழியர்கள் பணி நிறைவடைந்த பிறகு கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை மாதந்தோறும் பென்சனாக வழங்கப்படும். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணத்தை கொடுத்துவிட்டால் அதன் பின்னர் எதுவும் கிடைக்காது.

3. மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் அந்த ஓய்வூதிய தொகை அவரது கணவன் அல்லது மனைவிக்கு மாதந்தோறும் பென்சனாக வழங்கப்படும்.

4. இதையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதிய திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் உள்ளிட்டவை கிடைக்கும். ஆனால் இந்த நன்மைகள் எதுவும் கிடைக்காது.

5. பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை , இறப்பு பணிக்கொடை, பணி ஓய்வு பணிக்கொடை உள்ளிட்டவை கிடைக்கிறது. ஆனால் இது புதிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைப்பதில்லை.

6. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் போது பென்சன் தொகையும் உயரும்.

7. பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதிக்காக 50,000 ரூபாய் வரை பெறலாம். ஆனால் இந்த பலன்கள் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைப்பதில்லை.

8. மேலும் 80 வயதுக்கு மேல் உயிரோடு இருப்பவராக இருப்பின் கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை அதிகரிக்கப்படும். ஆனால் இது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் கிடைப்பதில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!