NTA UGC NET 2023 தேர்வு தேதி வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
NTA UGC NET 2023 தேர்வு தேதி வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
NTA UGC NET 2023 தேர்வு தேதி வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
NTA UGC NET 2023 தேர்வு தேதி வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET 2023 தேர்வுக்கான தேதியை 16.11.2023 அன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

NTA UGC NET 2023 தேர்வு தேதி:

இந்திய கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Junior Research Fellowship மற்றும் Assistant Professor பணிகளுக்கு என ஏற்படும் காலிப்பணியிடங்கள் தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் UGC NET தகுதித் தேர்வு மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான அறிவிப்பானது 30.09.2023 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 31.10.2023 அன்று வரை பெறப்பட்டது. இதனை தொடர்ந்து NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://nta.ac.in/) 16.11.2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் இத்தேர்வானது 6.12.2023 அன்று முதல் 14.12.2023 அன்று வரை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

இந்த UGC NET 2023 தேர்வானது கணினி வழித்தேர்வு முறையில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தேர்வானது காலை (9.00 மணி முதல் 12.00 மணி வரை), மாலை (3.00 மணி முதல் 6.00 மணி வரை) என இரண்டு சுற்றுகளாக 239 தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வின் முடிவுகள் ஜனவரி மாதம் 10ம் தேதி 2024ம் ஆண்டு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி தகவல்களை தேர்வர்கள் https://nta.ac.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.

Download NTA UGC NET 2023 Exam Date Notification Link
Official Website Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!