தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் – 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை!

0
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் - 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை!
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் - 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை!
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் – 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை!

தமிழக அரசு பேருந்துகளில் இதுவரை 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் கட்டணம் இல்லாமல் இருந்தது. தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பேருந்து கட்டணம் கிடையாது என அரசு அறிவித்துள்ளது.

இலவச கட்டணம்:

தமிழக அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு பல விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்தினர். இது மட்டுமல்லாமல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாகவே பயணித்து வருகின்றனர். மேலும் 4 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அரை டிக்கெட் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்!

இதற்கு பிறகு 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என கடந்த மே 5 ஆம் தேதி போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின் போது தீர்மானம் செய்தனர். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு டிக்கெட் வசூலிக்கப்படுமா எனவும் கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக்கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரன் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டணம் தானா அல்லது இலவச மகளிர் பேருந்து திட்டம் போல ஓரிரு பேருந்துகளில் மட்டும் தான் இலவசமா என்பது குறித்தான அறிவிப்பையும் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!