சிலிண்டருக்கான மானியம் வரவில்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

0
சிலிண்டருக்கான மானியம் வரவில்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!
சிலிண்டருக்கான மானியம் வரவில்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!
சிலிண்டருக்கான மானியம் வரவில்லையா? சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தற்போது தான் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சிலிண்டருக்கான மானியம் கிடைத்துள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியம்:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டருக்கான விலை திருத்தப்படும் போது விலை உயர்ந்தபடியே தான் இருக்கிறது. இதனால், மக்களுக்கு ஆதரவாக சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நாளடைவில் கொரோனா காலகட்டத்தின் போது சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் மானியம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்து கொண்டிருந்தனர். அதன்படி, சிலரின் வங்கி கணக்கிற்கு மட்டும் தற்போது மானியம் வரத் துவங்கியது.

தமிழக பள்ளிகளில் புதியதோர் அம்சம் – உதயநிதி ஸ்டாலின் தொடக்கம்!

மேலும், சிலருக்கு சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. அதாவது, சிலிண்டர் இணைப்பு வாங்கும் போது வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கும் கீழே இருந்தால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயமாக கேஸ் சிலிண்டர் எண்ணை ஆதாருடன் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும். இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினாலே மானியத்தொகையை பெற்றுவிடலாம். தற்போது எளிமையாக ஆன்லைன் மூலமாகவே மானியத்தொகை வருகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வதை பற்றி பார்க்கலாம்.

முதலில் Mylpg.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அதன் முகப்பு பக்கத்தில் உள்ள இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யவும். பின்னர், பார் மெனுவுக்குச் சென்று Give your feedback online என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் ஆகிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து Feedback Type என்கிற பகுதியை கிளிக் செய்து Complaint என்பதை தேர்வு செய்து Next கொடுக்க வேண்டும். பின்பு, சிலிண்டருக்கான மானியம் கிடைத்துள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!