கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் ‘ரேஷன்’ கிடையாது – மாநில அரசு திடீர் உத்தரவு!

0
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் 'ரேஷன்' கிடையாது - மாநில அரசு திடீர் உத்தரவு!
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் 'ரேஷன்' கிடையாது - மாநில அரசு திடீர் உத்தரவு!
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் ‘ரேஷன்’ கிடையாது – மாநில அரசு திடீர் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மாநில அரசுகள் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா முதல் அலை மற்றும் 2ம் அலை பரவலை தொடர்ந்து 3 ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரம் ஆக்கப்பட்டது. மேலும் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது. அதனை தொடர்ந்து மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தமிழக அரசு அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வு – உடனே வழங்க கோரிக்கை!

பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என மத்தியப் பிரதேச உணவு வழங்கல் துறை கூறியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை (WFH) – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடைக்காது என உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களின் பெயர்களை ஒவ்வொரு வாரமும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!