NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – ரூ.1,25,000/- மாத ஊதியம்!  

0
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - ரூ.1,25,000/- மாத ஊதியம்!  

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Joint Advisor, Assistant Advisor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 26.03.2024  அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பணியின் பெயர் Joint Advisor, Assistant Advisor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

NHAI காலியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Joint Advisor – 01 பணியிடம்
  • Assistant Advisor – 01 பணியிடம்

NHAI பணிக்கான தகுதி:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் District Level Revenue Officer, Tehsildar பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

NHAI வயது:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

ஒரே ஒரு ரூ.20 நோட்டை வைத்து லட்சாதிபதியாக மாறலாம் – என்ன விஷயம் தெரியுமா?

NHAI மாத ஊதியம்:

  • Joint Advisor பணிக்கு ரூ.75,000/- முதல் ரூ.1,25,000/- வரை என்றும்,
  • Assistant Advisor பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை என்றும் மாத ஊதியம் வழங்கப்படும்.

NHAI தேர்வு செய்யும் விதம்:

இந்த NHAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHAI விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (26.03.2024) அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!