SSC Stenographer தேர்வு முடிவு – சற்றுமுன் வெளியீடு!

0
SSC Stenographer தேர்வு முடிவு - சற்றுமுன் வெளியீடு!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளுக்கென நடைபெற்ற Stenographer (Grade C) LDCE என்னும் துறை சார்ந்த எழுத்து தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

SSC Stenographer தேர்வு முடிவு:

மத்திய செயலகம், இந்திய வெளியுறவு சேவை, ஆயுதப்படை தலைமையகம், ரயில்வே வாரிய செயலகம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் Grade C பிரிவின் கீழ் 2020, 2021, 2022ம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது SSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான SSC Stenographer (Grade C) LDCE என்னும் எழுத்து தேர்வானது கடந்த பிப்ரவரி 6ம் தேதி கணினி வழி தேர்வு முறையில் நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகளானது இன்று (12.03.2024) வெளியிடப்பட்டுள்ளது.

NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – ரூ.1,25,000/- மாத ஊதியம்!  

இதனை தேர்வர்கள் https://ssc.gov.in/ என்ற வலைதள பக்கத்தின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் அடுத்த கட்டமான திறன் தேர்வுக்கு (Skill Test) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு திறன் தேர்வானது 24.04.2024 அன்று டெல்லியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!