தமிழகத்தில் பஸ் கண்டக்டர்களுக்கான புதிய எச்சரிக்கை – அதிரடி அறிவிப்பு!

1
தமிழகத்தில் பஸ் கண்டக்டர்களுக்கான புதிய எச்சரிக்கை - அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் பஸ் கண்டக்டர்களுக்கான புதிய எச்சரிக்கை - அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் பஸ் கண்டக்டர்களுக்கான புதிய எச்சரிக்கை – அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் பணிபுரியும் கண்டக்டர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.

போக்குவரத்து துறை:

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் அதிக லாபம் ஈட்டி தரும் துறைகளில் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மேலும் ஆதார வளங்களுக்கும், உற்பத்திக்கும், விற்பனை சந்தைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது தான் போக்குவரத்தின் முக்கிய கடமையாகும். அதன்படி வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப தமிழக போக்குவரத்து துறையானது சாலை போக்குவரத்தில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

பொது போக்குவரத்து இந்த காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால் தினமும் ஏற்படும் சாலை நெரிசலை குறைக்க முடியும். மேலும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது பயனீட்டாளர்களின் செலவினத்தை குறைக்கலாம். அதுமட்டுமின்றி மக்களுக்கு பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி மக்களின் பயணத்தை எளிதாக்குகிறது. அத்தகைய போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தமிழக அரசு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை உடனே செயல்படுத்தியும் வருகிறது.

EPFO கணக்குதாரர்களுக்கான காப்பீடு வசதி – முழு விவரம் இதோ!

அந்த வகையில் அரசு பேருந்துகளில் பணிபுரியும் கண்டக்டர்கள் பேருந்து செல்போன் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பேசுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் பகலில் பணியின் போது இரு படிக்கட்டுகளும் தங்களது பார்வையில் இருக்கும்படி கடைசி இருக்கையில் அமர்ந்து இருக்க வேண்டும். மேலும் இரவில் நீண்ட தூர பேருந்துகளில், முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநருக்கு உதவியாக விழிப்புடன் பேருந்தை இயக்க உதவி புரிய வேண்டும். அரசு பேருந்துகளில் ஆய்வின் போது செல்போன் உபயோகிப்பது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் பொன்முடி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!