EPFO கணக்குதாரர்களுக்கான காப்பீடு வசதி – முழு விவரம் இதோ!

0
EPFO கணக்குதாரர்களுக்கான காப்பீடு வசதி - முழு விவரம் இதோ!
EPFO கணக்குதாரர்களுக்கான காப்பீடு வசதி - முழு விவரம் இதோ!
EPFO கணக்குதாரர்களுக்கான காப்பீடு வசதி – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் கணக்கு வைத்திருப்போருக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும் காப்பீடு வசதி பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

EPFO காப்பீடு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். அந்த வகையில் PF கணக்கு வைத்திருப்போருக்கு வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் இன்னும் பிற வசதிகளும் வழங்கப்படுகிறது. அதன் படி PF கணக்குதாரர்களுக்கு கிடைக்கும் காப்பீடு பற்றி பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download

அதில் PF கணக்குதாரர்களுக்கு தொழிலாளர் டெபாசிட் காப்பீடு திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்குகிறது. இந்த இன்சூரன்ஸ் வசதிக்கு PF கணக்குதாரர் கூடுதலாக எந்தவொரு கட்டணமோ, பிரீமியத் தொகையோ செலுத்த தேவையில்லை. இந்த காப்பீடு அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டத்தின் படி PF கணக்குதாரர் இறந்துவிட்டால் நாமினிக்கு 7 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைந்த கல்வி திட்டம் – முதல்வர் தொடக்கி வைப்பு!

மேலும் PF கணக்குதாரர் நோய் பாதிப்பால் இறந்தாலோ, விபத்தால் இறந்தாலோ, இயற்கையாகவே மரணம் எய்தினாலோ அவர் கொடுத்த நாமினிக்கு ரூ.7 லட்சம் வரை பணம் கிடைக்கும். அவ்வாறு PF கணக்குதாரருக்கு நாமினிகளே இல்லை எனில் அவரது கணவன்/மனைவி, திருமணமாகாத மகள்கள், வயது வராத மகன்கள் ஆகியோருக்கு இதன் மூலம் பணம் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!