திறக்கப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
திறக்கப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புதிய கடை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
திறக்கப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புதிய கடை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
திறக்கப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடையின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், இது சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த சில எபிசோடுகளாக பிரச்சனை, குழப்பம் என்று ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் மீண்டுமாக வழக்கமாக பாணிக்கு திரும்பி இருக்கிறது. எப்போதும் ஆனந்தம் விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் எப்போதாவது தான் ஏதாவதொரு பிரச்சனை ஏற்படும். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகள் கட்டிய புதிய கடைக்கு பிரச்சனைகள் வர, அனைவரும் குடும்பமாக சேர்ந்து தர்ணா போராட்டம் செய்து ஒரு வழியாக கடையை மீட்டுள்ளனர். இப்போது இந்த புதிய கடையை திறப்பதற்கான வேலைகளை அனைவரும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!

குறிப்பாக இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழா விஷயத்தில், ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து சில விஷயங்களை செய்து கொண்டுள்ளனர். அதாவது, கடை திறப்பு விழாவிற்கு புது துணி உடுத்துவது, தைப்பது, கோலம் போடுவது, கடையை அலங்காரம் செய்வது என சிறிய சிறிய விஷயங்கள் கூட இந்த சீரியலில் இடம்பிடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஏனென்றால் வழக்கமான வீட்டு விசேஷங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஒன்று விடாமல் இடம் பிடித்து வருவதால், இது தொடர்பான எபிசோடுகள் வரவேற்புகளை பெற்றிருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் நடந்த துயர சம்பவம் – திரையுலகினர் இரங்கல்!

இதனை அடுத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இன்னும் மீதமிருப்பது கடை திறப்பு நிகழ்வு மட்டும் தான். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை திறப்பு விழா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பில் கதிர், முல்லை, ஐஸ்வர்யா, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை திறப்பு விழா கொண்டாட்டம் அடுத்து வரும் எபிசோடுகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here