பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வரும் நடிகை ஹேமாவின் ஆரம்ப கால வாழ்க்கை, சீரியல் பிரவேசம், சினிமா பயணம் குறித்த சில ஸ்வாரசியமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

நடிகை ஹேமா

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நூற்றுக்கணக்கான சீரியல்களில், அதிகபட்ச மக்களின் மனம் கவர்ந்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றிருக்கும் ஒரு சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற சீரியலாக இருந்து வருகிறது. இத்தொடரில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது வில்லத்தனத்துடன் கூடிய நகைச்சுவை வேடத்தில் நடித்து வரவேற்புகளை பெற்று வருபவர் நடிகை ஹேமா.

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் நடந்த துயர சம்பவம் – திரையுலகினர் இரங்கல்!

மயிலாடு துறையை சொந்த ஊராக கொண்ட நடிகை ஹேமா வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்கு தான். அந்த வகையில் செயின்ட் பால்ஸ் பள்ளியில் படிப்பை முடித்த ஹேமா, தொடர்ந்து MCA பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவருக்கு சிறிய வயதில் இருந்தே மீடியாவில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதற்கிடையில் படித்து முடித்ததும் சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த ஹேமா, ஒரு மருத்துவமனையின் MDக்கு PAவாகவும் பணியாற்றி இருக்கிறார்.

அந்த சமயத்தில் ஹேமாவுக்குள் மீண்டும் மீடியா ஆசை துளிர்விட, வசந்த் டிவியில் செய்தி தொகுப்பாளராக மீடியா பயணத்தை துவங்கி இருக்கிறார். தொடர்ந்து பாலிமர், புது யுகம், பெப்பர் போன்ற சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். அப்போது தான் ஹேமாவுக்கு விஜய் டிவியின் ‘ஆபிஸ்’ சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து குலதெய்வம் என்ற சீரியலிலும் நெகட்டிவாக நடித்திருந்த ஹேமாவுக்கு, ஜீ தமிழில் ‘மெல்ல திறந்தது கதவு’ என்ற சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நடிகர் பிரதீப் கோட்டயம் திடீர் மாரடைப்பால் மரணம் – ரசிகர்கள் இரங்கல்!

இந்த சீரியலுக்கு பின்பாக நடிகை ஹேமா, சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த ஹேமாவுக்கு, மீண்டும் விஜய் டிவியின் ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் ‘பாயும் புலி’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இப்போது மீண்டுமாக சின்னத்திரையில் களமிறங்கி இருக்கும் ஹேமா, தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!