ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ஐ அதிகரிக்க மாஸ்டர் பிளான்!

0
ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - TRP ஐ அதிகரிக்க மாஸ்டர் பிளான்!
ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - TRP ஐ அதிகரிக்க மாஸ்டர் பிளான்!
ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ஐ அதிகரிக்க மாஸ்டர் பிளான்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ், TRPயில் போட்டி போட மூன்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை களமிறக்க இருக்கிறது.

ஜீ தமிழ் நிகழ்ச்சிகள்:

மக்களின் அன்றாட வாழ்க்கையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சீரியல்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய மாறுபட்ட நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர புதிய நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் களமிறங்க இருக்கின்றன. அதன் படி குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டுவர நடத்தப்படும் “ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4” நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 26 முதல் தொடங்க இருக்கிறது.

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – குவியும் லைக்குகள்!

நாளை தொடக்க நாள் என்பதால் மூன்று மணிநேர பிரம்மாண்ட சிறப்பு துவக்க நிகழ்ச்சி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் பின் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒன்றரை மணிநேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் திறமை உடைய 5 – 13 வயது வரம்பில் உள்ள 30 குழந்தைகள், பல்வேறு சுற்றுகளில் பலவிதமான கலைநடைகளில் தங்களது நடிப்புத் திறமைகளை நிரூபித்து, இறுதியாக பிரம்மாண்டமான இறுதி சுற்றிற்கு செல்வார்கள்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள நான்காவது சீசனில் விஜே கல்யாணி மற்றும் அமுதவாணன் ஆகியோர் வழிகாட்டி நிபுணர்களாகச் செயல்பட்டு, குழந்தைகளின் நடிப்புத் திறனை அனைத்து விதங்களிலும் வளர்க்க உதவி, நடுவர்களின் மனதைக் கவர உதவியாக இருப்பார்கள். மேலும் நடுவர்களாக சினேகா, மிர்ச்சி செந்தில் மற்றும் சம்யுக்தா ஆகியோர் இருக்கின்றனர். மேலும் கீகீ விஜய் தொகுப்பாளராக மீண்டும் வர இருக்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டார்ஸ்” ஐஸ்வர்யா விஜே தீபிகாவுடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் வீடியோ!

அதன் பின் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ‘ரஜினி’ என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். மேலும் மற்றொரு புதிய சீரியலான, ‘வித்யா நம்பர் 1’ சீரியல் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த இரண்டு சீரியல்களும் பெண்களை மையப்படுத்திய கதையை கொண்டுள்ளதால் சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here