ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – குவியும் லைக்குகள்!

0
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த 'பாரதி கண்ணம்மா' வெண்பா - குவியும் லைக்குகள்!
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த 'பாரதி கண்ணம்மா' வெண்பா - குவியும் லைக்குகள்!
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – குவியும் லைக்குகள்!

பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஃபரீனா, இன்றைய கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவரது வாழ்த்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வெண்பாவின் வாழ்த்து:

தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு சின்னத்திரை சீரியல் வரிசையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு அந்த சீரியல் மற்றும் அதன் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளனர். இதனால் மக்களுக்கு பிடித்தது போல் கதையின் போக்கும் கொண்டு செல்லப்படுகிறது. நிஜத்தில் மிகவும் பாசமான மற்றும் வெகுளித்தனம் கொண்ட நடிகை ஃபரீனா பாரதி கண்ணம்மா சீரியலில் மிகவும் கொடூரமான வில்லியாக நடித்துள்ளார். தான் நினைத்ததை சாதிக்க கொலையும் செய்யக் கூடிய ஒரு பெண்ணாக வெண்பா என்ற வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டார்ஸ்” ஐஸ்வர்யா விஜே தீபிகாவுடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் வீடியோ!

இந்த கதாபாத்திரம் ஆரம்பத்தில் மிகவும் சின்ன சின்ன அட்டூழியங்களை செய்யும் வில்லியாக தான் இருந்து வந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களில் தான் முழு வேகத்தில் பல அநியாயங்களை செய்து வந்தார். தற்போது ஃபரீனாவின் பிரசவ ஓய்வு முடிந்து அவர் மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளார். இதனால் சில வாரங்கள் சிறையில் இருந்ததாக காட்டப்பட்ட வெண்பா கதாபாத்திரம் விரைவில் சிறையில் இருந்து வெளியில் வருவது போல் காட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணிக்கடையில் வேலை பார்க்கும் விஜய் டிவி ‘பிக் பாஸ்’ தாமரையின் கணவர்? ரசிகர்கள் ஷாக்!

சீரியலுக்கு முன்னதாக அவர் விஜய் டிவியின் கிறிஸ்துமஸ் தின சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தை ஃபரீனா தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஃபரீனாவிற்கு தங்களது வாழ்த்துக்களையும், அவர் இல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியல் போர் அடிப்பதாகவும், மீண்டும் விரைவில் வெண்பாவாக வர வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!