அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மத்திய அமைச்சகத்தின் புதிய விதிகள் அறிவிப்பு!
இந்தியாவில் அனைத்து வங்கி சார்ந்த பண பரிவர்தனைகளுக்கும் பான் கார்டு அவசிய ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 20 லட்சத்திற்கு மேற்பட்ட பண பரிவர்தனைகளுக்கு பான் எண் அவசியம் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பான் கார்டு:
இந்தியாவில் அதிக அளவு பண பரிவர்த்தனைகள் வங்கி கணக்குகள் மூலமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த வருடங்களில் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் தேவைக்காக பகுதி நேரமாக இயக்கப்பட்டு வந்தது. மேலும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு வங்கிகள் ஆன்லைன் மூலமாகவும் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் முறை பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மோசடிகளும் நடைபெற்றது. இந்த நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உரிய அறிவுரைகளையும் வழங்கியது. பாதுகாப்பான பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் பான் கார்டு வரி ஏய்ப்பை தடுக்க உதவுகிறது. நிரந்தர கணக்கு எண்ணே பான் கார்டு எனப்படுகிறது. ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் எண் பெற்ற பிறகு அதை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 50,000 க்கு மேற்பட்ட பணத்தை முதலீடு செய்யும் போது அல்லது எடுக்கும் போது பான் எண் அவசியமாகிறது. மேலும் ஒரு நாளில் 5,000க்கும் உட்பட்ட பண பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கி கணக்கில் ஓர் ஆண்டில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ ஆதார் மற்றும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிபந்தனைகள் மே 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்