திருப்பதி எழுமையான் கோவிலுக்கு வர புதிய கட்டுப்பாடு.. இனி இந்த வாகனம் மட்டும் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி!

0
திருப்பதி எழுமையான் கோவிலுக்கு வர புதிய கட்டுப்பாடு.. இனி இந்த வாகனம் மட்டும் அனுமதி - தேவஸ்தானம் அதிரடி!
திருப்பதி எழுமையான் கோவிலுக்கு வர புதிய கட்டுப்பாடு.. இனி இந்த வாகனம் மட்டும் அனுமதி - தேவஸ்தானம் அதிரடி!
திருப்பதி எழுமையான் கோவிலுக்கு வர புதிய கட்டுப்பாடு.. இனி இந்த வாகனம் மட்டும் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மலைப்பகுதிகளில் தொடர் விபத்துகளை தடுக்க புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

திருப்பதி கோவில்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வாகனங்களில் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று மலைப்பாதையில் ஆய்வு செய்தார். அதன் பின் அவர் அளித்த பேட்டியில், பக்தர்களின் பாதுகாப்பிற்கு தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.

தமிழகத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய போராட்டம் அறிவிப்பு – ஜூன் 27ல் ஏற்பாடு!

மேலும் ஒவ்வொரு வாகனத்தையும் நன்றாக ஆய்வு செய்ய அதிநவீன இயந்திரங்கள் அமைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அலிபிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்ய தாமதம் ஆகிறது. அதனால் பக்தர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

மேலும் அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்களின் பிட்னஸ் சரிபார்த்த பின்னரே மலைப்பாதையில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தில் இன்சூரன்ஸ், பிரேக், எஸ்கலேட்டர் உள்பட முழு தகுதி இருப்பை மட்டும் உள்ளே செல்ல வேண்டும் எனவும், வண்டியை ஓட்டுபவரும் முழு உடல் தகுதிஉடன் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!