Airtel நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Airtel நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!

முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான Airtel நிறுவனம் தற்போது ரூ.19 ரூபாயில் இருந்து ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், அனைத்து ரீசார்ஜ் திட்டத்திற்கும் கூடுதல் சேவைகள் வழங்கப்படுகிறது.

Airtel நிறுவனம்:

ஜியோ, ஏர்டெல், ஏர்செல் முதலான நிறுவனங்கள் தான் நாட்டில் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. தடையற்ற நெட்ஒர்க் சேவை, மலிவான விலையில் ரீசார்ஜ் ஆகிய பல வசதிகளை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதிலும் குறைவான விலையில் அதிக டேட்டா பிளான்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், 19 ரூபாயில் இருந்தே பார்தி ஏர்டெல் நிறுவனம் டேட்டா வவுச்சர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த 19 ரூபாயில் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் ஒரு நாளாகும்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

இதுமட்டுமல்லாமல் பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக பல ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. ரூ.58, ரூ.98, ரூ.108, ரூ.118, ரூ.148 மற்றும் ரூ.301 ஆகிய விலையில் அதிகமான நெட்ஒர்க் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. ரூ.58 ரீசார்ஜ் திட்டத்திற்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தற்போதைக்கு ரூ.58 ரீசார்ஜ் திட்டம் ப்ரீபெய்ட் திட்டமாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து ரூ.98 ரீசார்ஜ் திட்டத்திற்கு 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், ரூ.108 ரீசார்ஜ் திட்டத்திற்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இலவச பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு சோதனை மற்றும் இலவச HelloTune சேவைகள் வழங்கப்படுகிறது. ரூ.118 ரீசார்ஜ் திட்டத்திற்கு 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.108 ரீசார்ஜ் திட்டத்தை விட ரூ.118 ரீசார்ஜ் திட்டத்திற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. ரூ.148 ரீசார்ஜ் திட்டத்திற்கு 15 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கின் இலவச சந்தா சேவைகளும் கொடுக்கப்படுகிறது. ரூ.301 ரீசார்ஜ் திட்டத்திற்கு 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் Wink Music Premium சந்தா சேவைகள் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!