
தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நேர்காணல் ஒத்திவைப்பு!
கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல், அந்தந்த மாவட்டங்களில் துவங்கியுள்ள நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் நிறுத்தப்பட்டு உள்ளது.
நேர்காணல் ஒத்திவைப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நாளை 28.4.2022 கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கால்நடைகளை நன்கு கையாள தெரிந்திருத்தல் வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும். நேர்காணலுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கடிதம் மூலம் நேர்காணலுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நேர்காணலுக்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரியான www.trichirappalli.nic.in என்ற இணையதள முகவரியில் அவர்களுக்கான நேர்காணல் தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணி நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் அழைப்பாணை கடிதம் மற்றும் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகுதிகளுக்கான அனைத்து மூலச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை அசலுடன் நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்யும் வழிமுறைகள்!
மேலும் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் மாடு பிடிக்கவும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருந்தால் 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பங்கேற்கும் நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. இது போல, 2015ல் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு முறை நேர்காணல் தடைபட்ட நிலையில் தற்போது தான் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் நேர்காணல் முடிந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் நடந்து வரும் நிலையில் நிர்வாக காரணங்களால், நேர்காணல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக உடனே நிறுத்தி வைக்குமாறு மண்டல இணை இயக்குனர்களுக்கு துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 28.4.2022 நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் .வி ஜெயச்சந்திரன் பானு ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.