தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல் – புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் 2003 ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பணியின்போது அவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
EPFO பயனர்களுக்கு முக்கிய உத்தரவு – ஆதார் இணைப்பிற்கு கால அவகாசம்!
அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டடத்தை ரத்து செய்ய கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார். திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
TN Job “FB
Group” Join Now
தற்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என்பது குறித்து தமிழக அரசு குழு ஒன்றை நியமித்து பரிசீலனை செய்து வருகிறது. இந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த குழு ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு ஓய்வூதிய திட்டம் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.