10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு – மாநில திட்ட இயக்குனர் ஏற்பாடு!

0
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு - மாநில திட்ட இயக்குனர் ஏற்பாடு!
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு - மாநில திட்ட இயக்குனர் ஏற்பாடு!
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு – மாநில திட்ட இயக்குனர் ஏற்பாடு!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அதனை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்கவுள்ளதாக மாநில திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

உயர்கல்வி ஆலோசனைகள்:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டில் தான் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும், இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டதால் அனைத்து தேர்வுகளிலும் கேள்விகள் எளிமையாகவே கேட்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பள்ளி வகுப்பை முடித்ததுமே அடுத்து என்ன படிக்கலாம் என்பது தான் பலரின் யோசனையாகவே இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த மேற்படிப்பு தான் மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்பதால் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டிய கடமை மாணவருக்கு இருக்கிறது. மேலும், பெற்றோர்களுமே மேற்படிப்பு என்ன படிக்க வைக்கலாம் என புலம்பி கொண்டே தான் இருக்கின்றனர். அதனால், மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு மேற்படிப்பு என்ன படிக்கலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பாகவே பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழக பெண்களுக்கான இலவச பேருந்துகளில் முக்கிய மாற்றம் – போக்குவரத்து கழகம் முடிவு!

அதாவது, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப்படிப்புகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் ஆகிய அனைத்து சார்பான படிப்புகளில் உள்ள உட்பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்பு குறித்தான விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக மாநில திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!