தமிழக பெண்களுக்கான இலவச பேருந்துகளில் முக்கிய மாற்றம் – போக்குவரத்து கழகம் முடிவு!

0
தமிழக பெண்களுக்கான இலவச பேருந்துகளில் முக்கிய மாற்றம் - போக்குவரத்து கழகம் முடிவு!
தமிழக பெண்களுக்கான இலவச பேருந்துகளில் முக்கிய மாற்றம் - போக்குவரத்து கழகம் முடிவு!
தமிழக பெண்களுக்கான இலவச பேருந்துகளில் முக்கிய மாற்றம் – போக்குவரத்து கழகம் முடிவு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் இலவச பேருந்துகளை அடையாளம் காணும் நோக்கில் புதிய வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிங்க் பேருந்துகள்:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்கான நலத்திட்டங்களில் ஒன்று தான் இலவச பேருந்து பயணம். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பின் காரணமாக மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன் படி கடந்த ஆண்டு மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு பின் 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக கடந்த ஒரு ஆண்டில் 132 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக அரசும் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1600 கோடியை மானியமாக அளித்துள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ!

வழக்கமாக இந்த இலவச பேருந்துகளின் கண்ணாடிகளில் மகளிர் கட்டணம் இல்லை என எழுதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதனால் சில சிரமங்கள் ஏற்படுகிறது. அதாவது சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டாமல் இருக்கிறது. மேலும் தூரத்தில் வரும் பேருந்துகளை இதன் மூலம் அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. அதனால் போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை ‘பிங்க்’ நிறத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் தூரத்தில் வரும் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணலாம். மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த ‘பிங்க்’ நிற பஸ்களுக்கு அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் பின் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் 3,300 பஸ்களில் பாதி இலவச பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here