SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Sports கோட்டா மூலம் தேர்வு!

0
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - Sports கோட்டா மூலம் தேர்வு!
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - Sports கோட்டா மூலம் தேர்வு!

SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Sports கோட்டா மூலம் தேர்வு!

இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

வேலைவாய்ப்பு:

நமது நாட்டில் விளையாட்டு வீரர்கள் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு பல பதக்கங்களை நாட்டிற்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது வீரர்களுக்கான அரசு வேலை வாய்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. மேலும் விளையாட்டுத் துறையில் புகழ் பெற்ற பல வீரர்களும் இந்திய அரசாங்கத்தில் வேலை செய்து நாட்டிற்கு பல நன்மைகளை செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில வீரர்கள் ராணுவத்திலும் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2007 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றி அணியாக மாற்றிய ஜோகிந்தர் சர்மா, ஹரியானா காவல்துறையில் டிசிபியாக பணியாற்றி வருகிறார்.

Axis வங்கியில் பட்டதாரி பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரம் இதோ!

இந்நிலையில் தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் (PNB) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறைகளை தொடங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், இந்திய ரிசர்வ் வங்கியின் நாக்பூர் அலுவலகத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி மற்றும் பிற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பல போட்டியாளர்கள், அரசாங்க வேலைகளில் சேர்ந்து வருகின்றனர்.மேலும் இந்த நிலையில் வீரர்கள் பலரும் சிறிது காலத்திற்கு விளையாட்டை விட்டு விலகி வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள் எவ்வாறு தேர்வு செய்யப் படுகிறார்கள் என்பதை பார்ப்போம். விளையாட்டு சோதனைகள், மருத்துவப் பரிசோதனை, விளையாட்டு செயல்திறன் சோதனைகள், உடல் தகுதி, நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப் படுகின்றனர். அடுத்தாக, வங்கிகளில் இவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்புக்கான தகுதிகள் குமாஸ்தா, அலுவலக உதவியாளர், உதவியாளர்ஜூனியர், அசோசியேட்பியூன், பல்வேறு அதிகாரிகள் (PO/SO), ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!