AK ரசிகர்களுக்கான ஹேப்பி நியூஸ் – அடுத்தடுத்து அப்டேட் வெளியீடு!

0
AK ரசிகர்களுக்கான ஹேப்பி நியூஸ் - அடுத்தடுத்து அப்டேட் வெளியீடு
AK ரசிகர்களுக்கான ஹேப்பி நியூஸ் - அடுத்தடுத்து அப்டேட் வெளியீடு

AK ரசிகர்களுக்கான ஹேப்பி நியூஸ் – அடுத்தடுத்து அப்டேட் வெளியீடு!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் குமார் நடித்த வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியது. ரசிகர்களின் பயங்கர எதிர்பார்ப்பை தாண்டி வேற லெவல் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் அவரது 61 வது படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அஜித் குமார் 62 குறித்த அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.

அஜித் குமார் 62 வது படத்தின் அப்டேட்டுகள்:

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாத தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அஜித்குமார். அவரது நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டு ‘தல’ என்ற அடையாளத்தையும், தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே! அஜித் படம் என்றாலே தல ரசிகர்களுக்கு வரப்பிரசாதம் தான்.

இவ்வாறு 2019ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு அடுத்து ஹச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அஜித்குமாரின் 60 வது திரைப்படமாக வலிமை உருவாகியது. கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாக வேண்டிய படம் கொரோனா காரணத்தினால் 2022 ஆம் ஆண்டு பிப் 24ல் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அஜித்துக்காகவே பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகை பரீனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

மேலும், இப்படம் ரசிகர்களின் பயங்கர எதிர்பார்ப்பை தாண்டி வேற லெவல் ஹிட் கொடுத்துள்ளது. அதற்கு சமமாக பல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலுக்கு பஞ்சமில்லை. இதை தொடர்ந்து மீண்டும் ஹச் வினோத் இயக்கத்தில் இணையும் அஜித் குமார் அவரது 61 வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. எதிர்பாராத விதமாக அஜித்தின் 62 வது திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தொடங்கவுள்ளதாக படத்தின் அப்டேட்டுகள் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!