LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மீண்டும் மானியம்? சரிபார்க்கும் விவரங்கள் இதோ!

0
LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மீண்டும் மானியம்? சரிபார்க்கும் விவரங்கள் இதோ!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மீண்டும் மானியம்? சரிபார்க்கும் விவரங்கள் இதோ!

LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மீண்டும் மானியம்? சரிபார்க்கும் விவரங்கள் இதோ!

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. LPG மானியம் தற்போது வாடிக்கையாளர்களின் கணக்கில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் மானியத்தை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய தகவல்:

மத்திய அரசு நம் நாட்டில் உள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காக LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அரசு தரப்பிலிருந்து ஒரு ஆண்டிற்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானிய தொகை கொடுப்பதாக அறிவித்திருந்தது. அதன் படி சிலிண்டர் வாங்கும் போது முழுத் தொகையும் பெறப்படும். பின்பு அதற்கான மானியத் தொகை வங்கி கணக்குகளில் வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி – அதிரடி அறிவிப்பு!

கொரோனா காலகட்டத்தில் சிலிண்டர் வாங்குவதற்கு மானியம், வாடிக்கையாளர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை. மத்திய அரசு நிரந்தரமாக சிலிண்டர் மானியத்தை நிறுத்த போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் கடந்த மாதம் சிலருக்கு மானியம் வந்ததாகவும் பலருக்கு மானியம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வகையில் பலர் 79.26 ரூபாய் மானியம் பெறுகிறார்கள், பலர் 158.52 ரூபாய் அல்லது 237.78 ரூபாய் மானியம் பெற்று வருகிறார்கள். கணக்கில் மானியம் வந்திருக்கிறதா இல்லையா என்பதை எளிய வழிமுறை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  1. முதலில் www.mylpg.in ஐ திறக்க வேண்டும்.
  2. இப்போது திரையின் வலது பக்கத்தில் எரிவாயு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களின் புகைப்படம் தெரியும். உங்கள் சேவை வழங்குநரின் எரிவாயு சிலிண்டரின் புகைப்படத்தை இங்கே கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு,எரிவாயு சேவை வழங்குநரின் புதிய சாளரம் திரையில் திறக்கும். இப்போது மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழைவு மற்றும் புதிய பயனர் விருப்பத்தைத் தட்டவும்.
  4. நீங்கள் ஏற்கனவே உங்கள் ஐடியை இங்கே உருவாக்கியிருந்தால், உள்நுழையவும். உங்களிடம் ஐடி இல்லை என்றால், புதிய பயனரைத் தட்டுவதன் மூலம் இணையதளத்தில் உள்நுழையலாம்.
  5. இப்போது உங்கள் முன் சாளரம் திறக்கும், வலதுபுறத்தில் உள்ள View Cylinder Booking History என்பதைத் தட்டவும்.
  6. எந்தெந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கொடுக்கப்பட்டுள்ளது, எப்போது கொடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இங்கு கிடைக்கும்.
  7. இதனுடன், நீங்கள் எரிவாயுவை முன்பதிவு செய்து, மானியத் தொகையைப் பெறவில்லை என்றால், கருத்து பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  8. இப்போது மானிய பணத்தைப் பெறவில்லை என்ற புகாரையும் பதிவு செய்யலாம். இது தவிர, கட்டணமில்லா எண்ணான 18002333555 ஐ அழைப்பதன் மூலம் புகாரைப் பதிவு செய்யலாம்.
  9. Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!