ஊரடங்கில் இந்த சேவைகளுக்கு அனுமதி !!!!

0

ஊரடங்கில் இந்த சேவைகளுக்கு அனுமதி !!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் 14 இல் முடிய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !

உள்துறை அமைச்சகம்

இந்த ஊரடங்கு காரணமாக வர்த்தக, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஊரடங்கால் இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் இருந்து மீளவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்தும் வகையிலும் ஊரடங்கில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.இதில் இந்த தளர்வை பற்றிய அறிவிப்பு ஒன்றை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தளர்வுகள்

  1. பள்ளி பாடப்புத்தகங்கள் விற்கும் கடைகள், மின்விசிறி விற்கும் கடைகளுக்கு அனுமதி
  2. பொதுமக்கள் வசதிக்காக மொபைல் போன் ரிசார்ஜ் செய்யும் கடைகளுக்கு அனுமதி
    நகர்ப்புறங்களில் அமைந்துள்ள பிரட் தொழிற்சாலைகள், மாவு மில்கள், பருப்பு மில்கள். பால் பதப்படுத்தும் மையங்கள் செயல்பட அனுமதி
  3. மூத்த குடிமக்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பாளர்கள், படுக்கையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு அனுமதி
  4. விதைகள் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி/ இறக்குமதி
    விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி
  5. தேனீ, தேன் சார்ந்த பொருட்களை மாநிலத்திற்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் கொண்டு செல்ல அனுமதி
  6. காடு வளர்ப்பு சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி
  7. மேலும் இந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டாலும் அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!