தமிழகத்தில் 800 பேருக்கு அரசுப்பணி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தில் 800 பேருக்கு அரசுப்பணி - அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் 800 பேருக்கு அரசுப்பணி - அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் 800 பேருக்கு அரசுப்பணி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.

செவிலியர்களுக்கு வேலை:

நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த காலத்தில் மருத்துவத்துக்கு படித்து வேலை இல்லாமல் இருந்த நிறைய மருத்துவ செவிலியர்களுக்கு தற்காலிகமாக வேலைகள் கொடுக்கப் பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையில் செவிலிய மாணவர்களை தேர்ந்தெடுத்து சுகாதாரத் துறையில் ஒப்பந்த மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்த நிலையிலும் அந்த செவிலியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் அவர்கள் தங்களை அரசு செவிலியர்களாக பணி அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

இந்நிலையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது குறித்து பேசியுள்ளார். கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,000 செவிலியர்களின் 1,000க்கும் மேற்பட்டோருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுவிட்டது. 800 செவிலியர்களுக்கு மட்டும் தற்போதைய சூழலில் பணி வழங்க முடியாத நிலை உள்ளது. விரைவில் 800 செவிலியர்களுக்கும் அரசுப்பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பேரிடர் காலத்தில் பணிபுரிந்த ஒருவரைக்கூட விட்டுவிடாமல் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அனைவருக்கும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று செவிலியர்களிடம் அரசு தெரிவித்த பிறகும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. சில கட்சிகளின் தூண்டுதல் படியே செவிலியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்றும், பேரிடர் காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வருங்காலங்களில் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

[table “1078strong” not found /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!