பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொள்ளும் ரக்சன் – குஷியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரக்சன் தான் முதல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எக்கச்சக்கமான மக்களின் ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த ஆதரவின் அடிப்படையில் தான் இதுவரைக்கும் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நடத்தப்பட்டது. அதாவது இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
மேலும், சாதாரணமான பிக்பாஸ் நிகழ்ச்சி போலல்லாமல் 24 மணி நேரமும் மக்கள் நேரலையாக பார்க்கும்படி ஒளிபரப்பப்பட்டது. அதன்படி இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் அடுத்த சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், யார் யாரெல்லாம் இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தான தகவலும் பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்று வரும் ரக்சன் தான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவிவருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரக்சன் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரக்சன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதனால் கண்டிப்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரக்சன் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும், ரக்சனிடம் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைப் பக்கங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. மேலும், எப்போதும் போல பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.