விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா வீட்டில் புது வரவு – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா வீட்டில் புது வரவு - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமா வீட்டில் புது வரவு - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா வீட்டில் புது வரவு – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலம் நடிகை ஹேமா தனது சொந்த சம்பாத்தியத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஹேமா

சமீப காலமாக விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் டிஜிட்டல் மீடியா மீது அதிகளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருந்த பலரும் இப்போது யூடியூப் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இந்த யூடியூபில் தங்களது பெயரில் ஒரு சேனலை ஆரம்பித்து ரசிகர்களை கவரும் வண்ணம் பல வகையான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் எக்கச்சக்கமாக சம்பாதித்தும் வருகின்றனர். இதில், விஜே மணிமேகலையை ஒரு சிறந்த சான்றாக சொல்லலாம். இவர் தனது யூடியூப் வருமானத்தை வைத்து சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கினார்.

Exams Daily Mobile App Download

இந்த பாணியை பின்பற்றும் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை ஹேமா இப்போது புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஒரு பக்கத்தில் சீரியல் ஷூட்டிங் என்று பிசியாக சுற்றிக்கொண்டிருக்கும் நடிகை ஹேமா, ‘ஹேமாவின் டைரி’ என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ, சுற்றுலா, மேக்அப் என பலவகையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஹேமா. இந்த நிலையில், தான் சம்பாதித்த வருமானத்தை வைத்து தனக்கென்று சொந்தமாக ஒரு கார் வாங்கி இருக்கிறார் ஹேமா.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!

இந்த காரை தனது கணவர், மகன் மற்றும் குடும்பத்தினருடன் பெற்றுக்கொண்ட ஹேமா அதை ஒரு வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் நடிகை ஹேமாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சுமார் 900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற யதார்த்தமான கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா. ஆரம்பத்தில் இவரது கதாப்பாத்திரம் சற்று நெகட்டிவ் ஆக காட்டப்பட்டிருந்தாலும், போகப்போக கதையுடன் சேர்ந்து இவரது கதாப்பாத்திரமும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!