விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் டைட்டில் வின்னர் இவர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!

தமிழ் சின்னத்திரையில் சுமார் 35 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் 3வது சீசன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தற்போது டாப் ரேட்டிங்கில் வெற்றி நடைபோட்டு வருகிறது. தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அதன் ஷோ பார்மேட் தான். அந்த வகையில் ஒரு சாதாரண சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகளை புகுத்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த ஷோ ஈர்த்துள்ளது. இதுவரை 2 வெற்றிகரமான சீசன்களை கடந்துள்ள ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இப்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த சீசனில் தர்ஷன், கிரேஸ் கருணாஸ், வித்யுலேகா, ரோஷினி ஹரிப்ரியன், அம்மு அபிராமி, ஸ்ருதிகா, ராகுல் தாத்தா, அந்தோணி தாஸ், சந்தோஷ் என 8 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சந்தோஷ் உட்பட இதுவரை 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் என இரண்டு பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அறிமுகம் செய்யப்பட்டனர். இப்போது ஒவ்வொரு வாரமும், கலகலப்பாகவும், ஸ்வாரசியமாகவும் நகர்ந்து வரும் ‘குக் வித் கோமாளி’ ஷோ 35 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த நிலையில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் டைட்டில் வின்னர் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.

அதாவது, இதுவரை சீசன் 3ல் தர்ஷன், கிரேஸ் கருணாஸ், வித்யுலேகா ஆகியோர் சிறப்பாக சமைத்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் இவர்களுக்கு மட்டும் தான் ஏகப்பட்ட பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் கிரேஸ், தர்ஷன் மற்றும் அம்மு அபிராமி இவர்கள் மூவரில் ஒருவருடைய சாப்பாட்டை ருசித்த செஃப் வெங்கடேஷ் பட், இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு கொண்டு வந்திருந்தால் நீங்கள் தான் டைட்டில் வின்னர் என்று கூறி பாராட்டியுள்ளார். அது யார் என்ற விவரம் நாளை ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் தெரிந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here