தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

1
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பையும் ஏற்று கொள்ள வேண்டும் என கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியை தொடர்ந்து தமிழகத்தில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆவேசத்திலும்,அவசரத்திலும் தவறான முடிவுகளை எடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும், மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளி வளாகத்திற்குள்ளாகவும் ஏதேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். இது குறித்து கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம்: ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவு – முக்கிய அறிக்கை தாக்கல்!

அதில், பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களது பெற்றோரிடம் உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. அதாவது, பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்ட படிவத்தை பெற்றோரிடம் கொடுத்து கையெழுத்து வாங்கியதாக புகார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

இதனால் முதன்மை கல்வி அலுவலர் பூபதி செய்திக்குறிப்பில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின் சில தனியார் பள்ளிகள் இதுபோன்ற படிவம் பெறுவதாக புகார் எழுந்திருந்தாலும், பெற்றோர் தரப்பில் இருந்து இது குறித்து எந்த புகாரும் பதிவாகவில்லை. இதனால் தான் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவாக சுற்றறிக்கை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் புகார்கள் பெறப்பட்டு விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Also please check the number of books carried by the children, once again it has become too heavy… Please someone do something…. Authorities please please, cbse also

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!