Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைந்த விலையில் புதிய Prepaid திட்டம்! அதிக பலன்கள்!

0
Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைந்த விலையில் புதிய Prepaid திட்டம்! அதிக பலன்கள்!
Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைந்த விலையில் புதிய Prepaid திட்டம்! அதிக பலன்கள்!
Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைந்த விலையில் புதிய Prepaid திட்டம்! அதிக பலன்கள்!

இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் பிரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு புதிய பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரீபெய்டு திட்டம்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு தங்களின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை தன்வசம் கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், தற்போது இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜியோ நிறுவனம் புதிய பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

அதாவது, ரூ.750 பிரீபெய்டு திட்டம் என்ற புதிய பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டாவை பெற முடியும். அத்துடன் இத்திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. மேலும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் பெற முடிகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 180 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. அத்துடன் தினசரி 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் டேட்டா வேகம் குறைக்கப்பட்டு 64Kbps டேட்டாவும் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து தினமும் 100 SMSகளும் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டம் ரூ.249, ரூ.299, ரூ.533, ரூ.719, ரூ.1066 மற்றும் ரூ.2879 உள்ளிட்ட திட்டங்களுடன் சேர்ந்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியதாக இருக்கும். இதில் தங்களுக்கு தேவையான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அத்துடன் ஜியோவின் 2879 ரூபாய் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டம் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த உகந்ததாக இருக்கும். மேலும் இத்திட்டங்களில் ஜியோவின் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவைகளையும் பெற முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!