PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை! EPFO அறிவுறுத்தல்!

0
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - மோசடி எச்சரிக்கை! EPFO அறிவுறுத்தல்!
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - மோசடி எச்சரிக்கை! EPFO அறிவுறுத்தல்!
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை! EPFO அறிவுறுத்தல்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆன்லைன் மோசடிகளின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மோசடி எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் பல வகையான அரசு மற்றும் தனியார் துறை சேவைகள் ஆன்லைன் மூலமே வழங்கப்படுகின்றன. இந்த சேவைகள் வாடிக்கையாளர்களால் பெற்றுக்கொள்வதற்கு எளிதாக இருந்தாலும் இது அவ்வப்போது சில மோசடிகளுக்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் சந்தாதாரர்களுக்கு ஆன்லைன் மோசடிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மூன்றே நாளில் அப்ரூவல்!

அதாவது, மோசடித் திட்டங்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தி, ஆன்லைனில் இருக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான வழிகளை EPFO அமைப்பு பகிர்ந்துள்ளது. இது குறித்து அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, யாரேனும் ஒருவர் EPFO பிரதிநிதி என்று கூறி ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், EPFO அதன் உறுப்பினர்களை வாட்ஸ்அப் அல்லது எந்தவொரு சமூக ஊடக தளங்களிலும் இருந்து தனது சேவைகளுக்காக பணம் டெபாசிட் செய்யும்படி கேட்காது. உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ அல்லது EPFO அதிகாரிகள் என்ற பெயரில் பணம் அனுப்பவோ கேட்கும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் – முழு விபரம் இதோ!

இப்போது UAN விவரங்கள் அல்லது PAN அல்லது ஆதார் எண்ணைப் பகிருமாறு அழைப்புகள் அல்லது செய்திகளை பெற்றால், www.epfindia.gov.in என்ற இணையதளம் மூலம் உடனடியாக EPFO அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க, EPFO உறுப்பினர்கள் அவற்றை DigiLocker இல் வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த DigiLocker என்பது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமிப்பதற்கும், பகிர்வதற்கும், சரிபார்ப்பதற்கும் பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தளமாகும். இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!