TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் – முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & காலிப்பணியிடங்கள் – முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின் படி குரூப் 2, 2A தேர்வின் பதவிகள், காலியிடங்கள், தேர்வு விவரம், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2A தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முன்னதாக பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 தேர்வுகளை நடத்துவதாக அறிவித்திருந்தது. அதன்பின்னர் கொரோனா 3ம் அலை தாக்கத்தின் காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் பற்றிய அறிவிப்பினை பிப்ரவரி 23ம் தேதி வெளியிட இருப்பதாக கடந்த வாரம் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்வுகள் இனி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நேர தேர்வுகள் அனைத்தும் வழக்கமான நேரத்தின் படி தான் நடத்தப்படும்.

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!

அறிவிப்பின் படி குரூப் 2 பிரிவில் 116 இடங்களும், 2A பிரிவில் 5,413 இடங்களும் காலியாக உள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், அல்லது இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். குரூப் 2 பணிகளுக்கு மாதம் ரூ,37,200 முதல் 1,17,600 வரை சம்பளம் வழங்கப்படும். 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், தற்போது வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 2 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு என்று 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். TNPSC ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! பொதுமக்கள் அச்சம்!

முதல்நிலை தேர்வின் முடிவுகள் ஜூன் மதமும், முதன்மை தேர்வின் முடிவுகள், கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் அல்லது 2023 ஜனவரியில் வெளியிடப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும், 100 தமிழ் மொழி கேள்விகள் மற்றும் 75 பொது அரசுவு மற்றும் 25 நுண்ணறிவு கேள்விகளும் வினாத்தாளில் இருக்கும்.

எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் உள்ள பணியிடங்கள்:

துணை வணிக வரி அதிகாரி, கிரேடு 2 நகராட்சி ஆணையர், ஜூனியர் வேலைவாய்ப்பாளர் அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர், உதவி அலுவலர் மற்றும் புரோகிராமர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, திட்ட உதவியாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இந்து சமய தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தாளர் / தலைமை கணக்காளர் / ஜூனியர் கண்காணிப்பாளர் தமிழ்நாடு வேளாண்மை துறை உள்ளிட்ட 33 பதவிகள் உள்ளது.

நேர்முகத் தேர்வின்றி நிரப்பப்படும் பணியிடங்கள்:

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை கணக்காளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், தலைமை செயலகத்தில் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து), இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், பொது விநியோக துறை, நேர்முக எழுத்தாளர் (சட்டம் மற்றும் நிதித் துறையைத் தவிர்த்து), நேர்முக எழுத்தாளர் (சட்டத்துறை)> நேர்முக எழுத்தாளர் (நிதித்துறை) தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் நேர்முக எழுத்தாளர், நேர்முக எழுத்தாளர், தமிழ்நாடு திட்டக்குழு, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், வருவாய் நிர்வாகம், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள், பதிவு, போக்குவரத்து, சிறை, போலீஸ், உணவு பொது விநியோகம் மற்றும், நுகர்வோர் பாதுகாப்பு, நில நிர்வாகம், நில சீர்திருத்தங்கள், மீன்வளம், பொதுப்பணித்துறை, தொழில்நுட்பக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர், வேலைவாய்ப்பு பயிற்சி, வணிக வரிகள் போன்ற இன்னும் பல பணியிடங்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!