தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மூன்றே நாளில் அப்ரூவல்!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - மூன்றே நாளில் அப்ரூவல்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - மூன்றே நாளில் அப்ரூவல்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மூன்றே நாளில் அப்ரூவல்!

தமிழகத்தில் பலருக்கும் ரேஷன் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. எளிமையாக 3 நாட்களில் வீட்டில் இருந்து ரேஷன் கார்டு அப்ரூவல் பெறும் முறை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் அனைத்து அரசு பணிகள் மற்றும் பொது பணிகளுக்கும் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அனைத்து குடும்பங்களுக்கும் அரசு ரேஷன் கார்டின் வகையை பொறுத்து மலிவு விலையில் குடும்பத்திற்கு தேவையான அரசி, எண்ணெய், பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். ஏதேனும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு ரேஷன் கார்டினை அடிப்படையாக வைத்து தான் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட் – முதல் போட்டிக்கான 4 ஓவர்சீஸ் வீரர்கள்!

ரேஷன் கார்டினை பெற முன்னதாக அரசு அலுவலங்களுக்கு நேரில் அலைய வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது அரசு ஆன்லைனில் எளிய முறையில் ரேஷன் கார்டின் மாற்றங்களை மற்றும் ரேஷன் கார்டினை பெறுவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றே நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் கிடைக்க செய்ய வேண்டிய படிநிலைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

 • முதலில் அரசின் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 • அதில் மின்னணு அட்டை சேவைகள் என்ற பிரிவில் கீழ் உள்ள புதிய மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • இப்பொழுது புதிய பக்கத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்னர், Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
 • முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்க வேண்டும்.
 • குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.
 • அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை 1 எம்பி அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம்.
 • உறுப்பினர்கள் சேர்க்கை பிரிவில், அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, ஆதாரினை பதிவிட வேண்டும்.
 • உறுப்பினர் சேர்க்கை பிரிவில், மற்றவர்களின் விவரகிகளையும் உள்ளிட்ட வேண்டும்.
 • எரிவாயு இணைப்பு பிரிவில் கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு, எரிவாயு நிறுவனத்தின் பெயர் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
 • உங்களது விவரங்களை சரிபார்த்த பிறகு சமர்ப்பிக்கும் போது குறிப்பு எண் வரும், அதனை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • இதன்பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணம், விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
 • உங்கள் ஆவணங்கள் சரியாக இருப்பின், மூன்று நாட்களில் உங்களது ரேஷன் கார்டுக்கு அப்ரூவல் கிடைத்து விடும். அதன்பிறகு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டினை பெற்றுக் கொள்ள முடியும்.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here