12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

0
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - தமிழக அரசின் புதிய ஏற்பாடு!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - தமிழக அரசின் புதிய ஏற்பாடு!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு 12 ஆம் வகுப்பு மாணவரும் கட்டாயமாக இமெயில் முகவரியை திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்

தமிழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களில் இருந்து இமெயில் மூலமாகவே தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக இமெயில் முகவரி உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் இமெயில் முகவரியை உருவாக்குவதற்கு பள்ளி ஆசிரியர்கள் வழி காட்ட வேண்டும் எனவும், இமெயில் முகவரியை உருவாக்கிய பின்னர் எமிஸ்தளத்தில் மாணவர்களின் இமெயில் தகவல் குறித்த அறிவிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு!

மேலும், ஆசிரியர்கள் கட்டாயமாக இமெயில் முகவரியை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு ஒரு செய்தியை திறந்து பார்த்து தகவலை அனுப்புவது என்பது குறித்தான அனைத்து தகவலையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, ஒவ்வொரு மாணவரும் புதிதாக இமெயில் முகவரியை திறந்த பின்னர் [email protected] என்கிற முகவரிக்கு மாணவரின் இலக்கு என்னவாக இருக்கும் என்பதனை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூலை 30-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் லேப்டாப் கணினிகளை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவருக்கும் இமெயில் முகவரியை உருவாக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!