விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவுக்கு தாய் மாமாவாக புதிய கதாப்பாத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த புது என்ட்ரி மூலம் கதையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சமீப காலமாக ரசிகர்களின் கவனத்தில் இருந்து சற்று விலகி இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஒரு முக்கியமான திருப்பம் அரங்கேற இருக்கிறது. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக எந்தவொரு ஸ்வாரசியமான நிகழ்வுகளும் நடைபெறாத நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் வரவேற்புகள் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதனால் இழந்த ரசிகர்களை மீட்டெடுக்கும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டுமாக குடும்பத்துடன் இணைவது போல ஒரு கதைக்களம் வெளியானது.
இனியா தோழி நிகிலாவிற்கு நியாயம் கேட்டு போராடும் பாக்கியா, உண்மையை நிரூபிப்பாரா? இன்றைய எபிசோட்!
இது ரசிகர்களின் கவனம் பெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக கயல் பாப்பாவின் பிறந்த நாள் விழா, பாண்டியனின் பெயர் சூட்டு விழா என்று இந்த சீரியல் ஒளிபரப்பானது. இதற்கு அடுத்ததாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கயல் பாப்பாவின் காது குத்து விழா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்சமயம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த எபிசோடில் கயலுக்கு தாய் மாமாவாக புதிய கதாப்பாத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!
இந்த காட்சிகள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ப்ரோமோவாக வெளியானதை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்க இருப்பவர் பிரபல நடிகர் ரவிவர்மன் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில், ‘ராஜா ராணி 2’ சீரியலில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ரவிவர்மன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் வில்லனாக அறிமுகம் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.