கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!

0
கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!
கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!
கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!

ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில், சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2:

சமீபத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரீனா தனது கர்ப்ப காலத்திலும் இடைவிடாது நடித்து, அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்து சில வாரங்கள் மட்டுமே ஓய்வில் இருந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார். இதே போல், தற்போது ராஜா ராணி 2 சீரியல் நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இவர் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது அதன் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – வெளியான வீடியோ!

தற்போது ஆல்யா நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் அவருக்கு ஐபிஎஸ் அதிகாரி வேடம். கதையில் இனி தான் அது போன்ற காட்சிகள் வர உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆல்யா கர்ப்பமாக இருப்பதால் இவர் தொடர்ந்து சீரியலில் நடிக்க மாட்டார் என்று பல வதந்திகள் கிளம்பியது. ஆனால் இதற்கு ஆல்யா பதில் அளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனால் இவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். சீரியலின் இயக்குனரும் ஒரு விடியோவில் ஆல்யா தான் சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் என்று கூறி விட்டார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்!

சீரியலில் தற்போது சரவணன் கலந்து கொண்டுள்ள சமையல் போட்டியில் அவர் வெற்றி பெற்று ஊருக்கு வந்ததும், அவர்களின் குல தெய்வ கோயிலுக்கு செல்வது போல் காட்சிகள் வர உள்ளது. இதற்காக அவர்கள் ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆல்யா கர்ப்பமாக இருப்பதால், சீரியல் மாமியார் சிவகாமி ஆல்யாவிற்கு ஆற்றை கடந்து வர உதவி செய்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் அனைவரும் அவருக்கு உதவ ஓடி வருகின்றனர். நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், ஓய்வில்லாமல் வேலை செய்யும் ஆல்யாவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!