விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது கதைக்களம் புதுவிதமான டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது. வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என அவருடைய அம்மா ஷர்மிளா கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையாக பிரபல நடிகர் ஒருவர் களமிறங்கி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்களா என எதிர்பார்த்து இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புதுவிதமான டிராக் தொடங்கப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்க இருவருக்கும் இடையே அதிகமான காதல் காட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் தற்போது காட்டப்படாமல் ஹேமாவிற்கு அம்மா வேண்டும் என சொல்வது போலவும் அது பாரதிக்கு பிடிக்காமல் இருப்பது போலவும் காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது.

குற்றவாளி செல்வத்தை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் மறுபக்கம் கொடூரமான வில்லியாக காட்டப்பட்ட வெண்பா தற்போது அவருடைய அம்மா என்ட்ரிக்கு பின் காமெடி பீசாக மாறி இருக்கிறார். வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என குறிக்கோளுடன் ஷர்மிளா இருக்க பல இடங்களில் தேடி மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால் பல வேலைகளை செய்து வெண்பா மாப்பிள்ளைகளை ஓட விடுகிறார். கடைசியாக ஒரு மாப்பிள்ளையை அடி ஆட்கள் வைத்து அடிக்க திட்டமிட ஆனால் அது எல்லாம் வெண்பாவிற்கு எதிராக மாறிவிடுகிறது.

Exams Daily Mobile App Download

அந்த ரவுடிகள் வெண்பாவிடம் வம்பிழுக்க அப்போது புதிய கதாபாத்திரம் ஒருவர் என்ட்ரி கொடுத்து வெண்பாவை காப்பாற்றுகிறார். அதனால் வெண்பாவிற்கு அவர் மீது நல்ல மரியாதை வர அவரை வெண்பா வீட்டிற்கு அழைக்கிறார். அப்போது ஷர்மிளா இது தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். புதிதாக என்ட்ரி கொடுத்த நடிகர் வேலைகாரன் சீரியலில் வேலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சபரி. சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். முன்னதாக பாரதி கதாபாத்திரத்தில் சபரி தான் கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!