‘மளிகை கடை, மாவு கடை, ஸ்வீட்டு கடை’ – விஜய் டிவி சீரியல்களை டேமேஜ் செய்த நெட்டிசன்கள்!

0
'மளிகை கடை, மாவு கடை, ஸ்வீட்டு கடை' - விஜய் டிவி சீரியல்களை டேமேஜ் செய்த நெட்டிசன்கள்!
'மளிகை கடை, மாவு கடை, ஸ்வீட்டு கடை' - விஜய் டிவி சீரியல்களை டேமேஜ் செய்த நெட்டிசன்கள்!
‘மளிகை கடை, மாவு கடை, ஸ்வீட்டு கடை’ – விஜய் டிவி சீரியல்களை டேமேஜ் செய்த நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் முன்னணியில் இருக்கும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களின் கதையை நெட்டிசன்கள் ஒரே வரியில் கொண்டு வந்து கலாய்த்து வருகின்றனர்.

முன்னணி சீரியல்கள்:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்துமே மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களாக இருக்கிறது. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் TRPயில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த சீரியல்களில் வேறு வேறு கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தாலும் சில சமயங்களில் கன்டென்ட் இல்லாமல் அவர்கள் தேவை இல்லாத விஷயங்களை கொண்டு வந்து நெட்டிசன்களிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

‘பிக் பாஸ்’ வீட்டில் தனது மகளின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் சில கதாபாத்திரங்கள் செய்யும் ஓவர் ஆக்ட் கூட சீரியலின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் ப்ரைம் டைம் சீரியல்களான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 போன்ற நான்கு சீரியல்களையும் நெட்டிசன்கள் ஒரே வரியில் சொல்லி கலாய்த்து உள்ளனர். அதற்கு மிக முக்கியமான காரணம் சீரியல்களின் ஒன் லைன் ஸ்டோரி.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கயல் பாப்பா பிறந்த நாள் – வைரலாகும் வீடியோ!

அதன்படி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மாவு அரைத்து விற்று மாவு கடை நடத்தி வருகிறார். அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் மசாலா கடை மற்றும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். ராஜா ராணி 2 சீரியலில் இனிப்பு கடை நடத்தி வருகின்றனர். அதனால் அனைவரும் கடையை மையமாக வைத்தே சீரியலை ஓட்டி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!