நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!

0
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் வெளியீடு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் வெளியீடு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வருகிற ஜூலை 17ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தேர்வர்களுக்கு தேர்வுக்கான நுழைவு சீட்டை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுக்கு கேட்கப்படுகிறது. இதற்கான கால அளவு 3 மணி 20 நிமிடங்கள் ஆகும். இத்தேர்வானது இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், இந்தியாவிற்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறுகிறது. இந்த தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் ஒடியா ஆகிய 13 மொழிகளில் நடைபெறுகிறது.

இந்திய உணவகங்களுக்கான முக்கிய எச்சரிக்கை – ‘இதை’ செய்ய கூடாது!

அதன்படி நடப்பு ஆண்டில் வருகிற ஜூலை 17ம் தேதி அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வுக்கு கடந்த ஏப்ரல் 6 தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டார்கள்.  அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க கடந்த மே 6ம் தேதி அன்று கடைசி நாளாகும்.  இதையடுத்து தேர்வுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் தேர்வர்கள் இத்தேர்வுக்கான தேர்வு நுழைவு சீட்டு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் நாளை முதல் தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!