ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் முக்கிய அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை UIDAIயின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக எளிமையாக மாற்றலாம். அதற்கு கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை:

மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஆதார் அட்டை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், வங்கியில் புதிதாக கணக்கு தொடங்குவது முதல் பல சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை முக்கியமாக அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில் அதில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Exams Daily Mobile App Download

இந்த ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் நிலையில் ஆதார் அட்டையில் எதாவது மாற்றங்கள் இருந்தால் அதை செய்யவும் UIDAI வாய்ப்பை வழங்குகிறது. ஆதார் அட்டையில் முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமல்லாமல் பயோமெட்ரிக் விவரங்களும் இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் உங்களுடைய புகைப்படமும் அதில் இருக்கும். ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பலருக்கு சரியாக இல்லாமல் இருப்பதால் அதை மாற்ற நினைக்கின்றனர்.

அவர்களுக்கு எளிய முறையில் புகைப்படத்தை மாற்ற ஆதார் வழிவகை செய்கிறது. UDAIயின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் ஆதாரில் உள்ள விவகாரங்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை எளிதாக மாற்ற முடியும். ஆனால் ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UDAI இணையதளத்தில் எப்படி ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

எளிய வழிமுறைகள்:
  • ஆதார் அட்டையில் சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி உங்களது புகைப்படத்தை மாற்றலாம். அதற்கான கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்படும்.
  • ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் சேதமடைந்தாலோ அல்லது அதை மாற்ற விரும்பினாலோ, https://uidai.gov.in என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் உள்நுழைந்து படிவத்தை பார்க்க முடியும். அந்த படிவத்தை நிரப்பி அருகிலுள்ள ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் சான்றாக அளிக்க வேண்டும்.
  • ஆதார் மையத்தைப் பார்வையிட்ட பிறகு புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும். பின் உங்களுக்கு ரசீது வழங்கப்படும்.
  • அதில் அடிப்படை புகைப்படம் மாற்றி இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
  • பின் ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். பின் இரண்டு வாரங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!