பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கம் – NCERTயின் முக்கிய விளக்கம்!

0
பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கம் - NCERTயின் முக்கிய விளக்கம்!
பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கம் - NCERTயின் முக்கிய விளக்கம்!
பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கம் – NCERTயின் முக்கிய விளக்கம்!

கடந்த ஆண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCRT) மேற்கொண்டு வருகிறது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து என்சிஆர்டி விளக்கம் அளித்துள்ளது.

பாடத்திட்ட மறுசீரமைப்பு

கொரோனா காலத்தில் மாணவர்களின் பாடச்சுமை குறைப்பதற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சமூகவியல் வரலாறு மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடப்புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டன. இதில் குறிப்பாக முகலாயர் வரலாறு,குஜராத் கலவரம் மகாத்மா காந்தி படுகொலையில் நாதூரம் கோட்சே பங்கு, சமத்துவத்துக்கான போராட்டம், தலித் எழுத்தாளர்கள், நக்ஸலைட் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பாடப் பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டு தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 சரிவு – குஷியில் பெண்கள்.. விலை நிலவரம் இதோ!

கொரோனா பரவல் குறைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும் நீக்கப்பட்ட பாடப்பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக NCRT விளக்கம் அளித்துள்ளதாவது, பள்ளி பாடப் புத்தகத்தில் மறுசீரமைப்பு பணிகள் NCRT நிபுணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுவதில்லை.

இதற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் மேலும் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின்படி பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. மேலும் 25 வெளி நிபுணர்கள் மற்றும் 16 சிபிஎஸ்இ ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஒரே மாதிரியான தகவல் பல இடங்களில் இருந்ததை கண்டறிந்த அவற்றை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!